எல்ல பகுதியில் அமைதியின்மை

எல்ல – வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 70 வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் 15 வருடங்களாக நடத்தி வந்த, வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியமை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறித்த வரத்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்