
அண்ணனும் தங்கையும் மின்னல் தாக்கி பலி
இரத்தினபுரி இரத்தோட்டை பகுதியில் வீடொன்றில் மின்னல் தாக்கியதில் சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தில் இவர்கள் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்காலயாய, இரத்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
