
மது போதையில் பேரூந்தை செலுத்திய சாரதி கைது
-வவுனியா நிருபர்-
வவுனியா ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேரூந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
