
ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி
ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ் அதிகாரிகள் கெய்ரோவிற்குச் செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்து 454 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
