
மரகுற்றிகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரை குற்றிகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் பொழுது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
