மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு புதுகுடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணியளவில் சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தலையனைச் சமர், மட்டை இழைத்தல், மா ஊதி காசு எடுத்தல், மிட்டாய் எடுத்தல், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் இதன் போது வழங்கி வைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்