காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 5 வயதுச் சிறுமி திடீரென மரணம்

-யாழ் நிருபர்-

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா (வயது – 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் காய்ச்சல் சுகமானது.

பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் அச்சுவேலி வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் நேற்றைய தினம் கோவில் ஒன்றுக்கு கொண்டு சென்று நூல் போடப்பட்டது.

பின்னர் திடீரென இன்றைய தினம் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்