டிப்பர் வாகனம் குடை சாய்ந்து விபத்து : ஒருவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால், வீதியின் நடுவே வாகனம் தடம் புரண்டுள்ளது.

இதன்போது அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனையோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்