பலாமரத்தில் ஏறிய முதியவர் பலி

நுவரெலியா பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறிய முதியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மதுரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரட்ட தம்பஹா கெடஹென பகுதியில் நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெடஹென பகுதியை சேர்ந்த பொல்வத்தகே கோஷித (வயது – 64) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்