
ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது
ராகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து, 20 கிராம் 860 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், டிஜிட்டல் தராசு, கைத்தொலைபேசி 60,940 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
