
உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை ஊவா கெமுனுபுர பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் இருந்தே இன்று ஞாயிற்று கிழமை காலை குறித்த காட்டு யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியபடாத போதிலும் மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகள் மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

