
புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விழா முள்ளிப்பொத்தானை சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.
இதில் தலையனைச் சமர்,யானைக்கு கண் வைத்தல், மட்டை இழைத்தல், பணிஸ் சாப்பிடுதல், பலூன் உடைத்தல்,கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து கொண்டு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் இதன் போது வழங்கி வைத்தார்.
மேலும் இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் நா.குகேந்திரா ,பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர்,விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


