நாட்டில் அதிகரித்துள்ள திருமண விவாகரத்து

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்து கொள்பவர்கள் இரண்டு முதல் மூன்று வருட குறுகிய காலப்பகுதியில் விவாகரத்து செய்யும் நிலை காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுத் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம், சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

குறிப்பாக புறக்கணிப்புகளே விவாகரத்துக்கான முக்கிய காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்