
“சரிகமப” மேடையில் நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்த மலையக இளைஞன்
இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு, பதுளை மாவட்டம் பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகராக இருக்கும் இந்திரஜித், அவருடைய பாடலை சரிகமப மேடையில் பாடி நடுவர்களை கண் கலங்க வைத்துள்ளார்.
அத்துடன் இது குறித்த முன்னோட்டக் காணொளி வெளியாகி ஒட்டுமொத்த இலங்கையர்களையும், பெருமையடைய வைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த போட்டியில், இந்திரஜித் வெற்றி பெற அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
