மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டம் ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களு கங்கையில் மாணிக்கக்கல் தோண்டும் பணியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்