விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன்: 90 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இலங்கையில்

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக சாதனை படைத்த விண்வெளி வீரர் யூரி ககாரினின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யூரி ககாரின் தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் க்ளுஷினோ என்ற கிராமத்தில் பிறந்தார்.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி விண்வெளிக்குச் சென்ற மற்றும் விண்வெளியில் பூமியை வலம் வந்த உலகின் முதல் மனிதராக யூரி ககாரின் வரலாற்றில் இணைந்தார்.

விண்வெளி வீரர் யூரி ககாரின் இலங்கைக்கு விஜயம் செய்தபோது நடப்பட்ட மரமொன்று இரத்தினபுரி சீவலி வித்தியாலய வளாகத்தில் இன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்