கிண்ணியா கண்டலடி ஊற்று கநையோர பகுதியில் கண்டல் தாவரம் நடும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அல் – றவ்ழா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 2024-04-25 ஆம் திகதி அல் – றவ்ழா இளைஞர் கழக கண்டல் தாவர அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டமானது கண்டலடி ஊற்று அல் – றவ்ழா பாடசாலைக்கு முன்பாக உள்ள கரையோரப் பகுதிகளிலேயே இவ் கண்டல் தாவரம் நட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.தொடர்ச்சியாக மூன்றாவது நாட்களாக இன்றும்   கண்டல் தாவரங்கள் நடப்பட்டன.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலளார்எம்.எச்.எம்.கணி,கிண்ணியா நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ், இளைஞர் சேவை அதிகாரி ஏ.டபிள்யூ.எம்.ஜிப்ரி, கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்.நுஸ்ரி, கிண்ணியா நகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பெரண்டினா நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்,கண்டலடிஊற்று பள்ளிவாயல் நிர்வாகிகள்,பொது மக்கள்,அல் – றவ்ழா இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்திற்கு அரச சார்பற்ற நிறுவனமான பெரண்டினா மற்றும் HSBC வங்கி நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கரையோரத்தை பாதுகாக்கவும் கடலரிப்பு போன்றவற்றை தடுக்கவும் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்