
வவுனியாவில் கோலாகலமாக ஆரம்பமானது என்.பி.எல்
-வவுனியா நிருபர்-
இலங்கை துடுப்பாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடர் வட மாகாண துடுப்பாட்ட சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று காலை வவுனியா நகரசபை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்ட அணிகள் பங்குபற்றும் நொதேர்ன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை இரண்டாவது முறையாக வட மாகாண துடுப்பாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் Vavuniya Vikings, Jaffna Gladiators, Mullai Panthers, Kilinochi Fighters, Mannar Kings எனும் பெயர்களில் மாவட்ட அணிகள் மோதுகின்றன இதேவேளை இன்றைய தினம் யாழ் மற்றும் முல்லைத்தீவு அணிகள் முதற் போட்டியில் மோதுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்றைய ஆரம்ப நிகழ்வானது வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோகேந்திரன் ரதீபன் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று ஆரம்பமாகும் போட்டி தொடரானது எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் என்ற அடிப்படையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது
மாவட்ட அணிகள் மோதும் இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை பார்வையிடவும் உங்கள் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் பார்வையாளர்களை மைதானத்துக்கு வட மாகாண கிரிக்கெட் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் யோகேந்திரன் ரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

