வறுமைக் கோட்டின்கீழ் உள்ள 425 பயனாளிகளுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

-மூதூர் நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்கீழ் 425 பயனாளிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை 10 கிலோ அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாலத்தோப்பூர் கிராம உத்தியோகத்தர் எம்.பர்சாத் தலைமையில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்து இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பொதுமக்களுக்கு நாடளாவிய ரீதியில் இவ் அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்