பிரான்ஸில் புகழ்பெற்ற கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் (Moulin Rouge) கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் உடைந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இது விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

விசிறிகள் உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இந்த விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றாலை விசிறிகளால் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பாரீஸ் நகர தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்