
பெற்ற மகளையும் அவரது தோழியையும் வன்கொடுமை செய்த தந்தை
மொனராகலையில் மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் மகளான 12 வயது சிறுமி மற்றும் அவரது 11 வயது தோழியுமே இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
