
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
🎁✨🎂சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி வணங்கிட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்.
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்.
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂 பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂நூறு வயதை கடந்தும்
வாழ்க.. பல்லாண்டு.
என வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂கவலைகள் கடந்து நீ வாழணும்.
சோகம் உன்னை தீண்டாமல் நீ வாழணும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂ஆசைகள் கொஞ்சம் அடக்கி வாழணும்.
வாழ்க்கையில நீ ஜெயிச்சி வாழணும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்.
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
🎁✨🎂அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே.
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து.
உன் வாழ்க்கையில் வளர
உளமார வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂சொர்க்கத்தை நீ வாழும்போதே
காண வேண்டும்.. ஆயுள் முழுதும்
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
உளமார உன்னை வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂புத்தகமாய் உன் வரலாறை
பலர் உன்னை படித்திடவே.
பல சாதனைகளை நிகழ்த்திட
வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂ஆகாசம் வாசலாக
உன் வாழ்வு திறக்கட்டும்.
ஏழு பிறப்பு எடுத்தாலும்
இனிமையாக மலர வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🎁✨🎂சூரியனை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
சுருண்டு விழுந்தது உன் வீரம் கண்டு.
தென்றலை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
தெறித்து ஓடியது உன் ஈரம் கண்டு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்