
சிகிச்சைக்காக சென்ற குழந்தையின் நகையை திருடிய போலி வைத்தியர்
பதுளை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளார்.
அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன் போது மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்ற வேண்டும் என்று கூறி குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவ மனையில் உள்ள மேசையில் உட்கார வைத்து விட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
