
சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் தாஸீம் ஓய்வு
-மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்-
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வரை கடமை புரிந்து வந்த எம்.எல் தாஸீம் தனது 34வருடகால அரச சேவையில் இருந்து புதன்கிழமை ஓய்வு பெற்றார்.
இவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று முன் தினம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிராம சேவை உத்தியோகத்தர் தரம் 1ச் சேர்ந்த இவர் 1964ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 25ஆம் திகதி சுலைமாலெப்பை லைலத்தும்மா மற்றும் அலியார் மீராலெப்பை ஆகியோருக்கு மகனாக சம்மாந்துறையில் பிறந்தார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை சம்மாந்துறை அல் மர்ஜான் மத்திய கல்லூரியிலும்,பின்னர் தனது இடை நிலைக்கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார்.
இவர் 1990ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 03ஆம் திகதி நில அளவை திணைக்களத்தில் பட வரைவாளராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றினார்.
அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 04ஆம் திகதி கிராம சேவகர் பரீட்சையில் சித்தியடைந்து கிராம சேவகராக சம்மாந்துறை பிரதேச செயலகத்தல் கடமையாற்றியதோடு 2013ஆம் ஆண்டு 6 ம் மாதம் பதில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெறுகிறார்.
தற்போது சம்மாந்துறை மஸ்ஜித் நகர் பள்ளிவாசல் தலைவராகவும்,சம்மாந்துறை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளராகவும் செயற்படுகின்றார்.
அமைதியான சுபாவம் கொண்ட இவர் கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவர் என்பதோடு எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழககூடிய ஒரு நல்ல மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவகர் நலனோம்பல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூஎல் அஸ்லம்(எல்.எல்.பி), கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா,பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி எப்.சாஹினா காணி எம் சவாஹீர் உட்பட கிராம சேவகர்கள்,காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
