
தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி
ஜி.ஐ.செட் நிறுவனத்தால் 5 மாகாணங்களில் இருந்து தெரிவு செய்ப்பட்ட ஐந்து தொழில்நுட்பக்கல்லூரிகளில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.
இதன் அடிப்படையில் அதிபர் எஸ் .சோமசூரியம் தலைமையில் பல ஆய்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
ஆய்வு நிறுவனமான என்.சீ.பீ.சீ இன் குழு ஓன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு விஜயம் செய்து ஆய்வை மேற்கொண்டனர்.
றுவான்(Operation Manager) தலைமையிலான குழுவில், மதுவாசினி(Project Coordinator), தருசி(Town & country Planer)கரும், அக்பர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்போது பசுமை தொழில்நுட்பம், கழிவு நீர் மேலாண்மை, ஆற்றல் சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .
இதன் பின் பல அபிவிருத்தி திட்டங்கள் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் குழுவின் தலைவர் ருவான் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்








