
கஞ்சாவுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்
பதுளை கந்தகொல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கமவெல சந்தியில் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால் குறித்த வீதியின் ஊடாக சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது முச்சக்கர வண்டி சாரதியின் கால்சட்டை பையில் வைத்திருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சா படல்கும்புர பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வியாழக்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
