சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மீட்பு

சிவனொளிபாத மலைக்கு 2 பெண்களுடன் யாத்திரை சென்ற நிலையில் மலை உச்சியில் இருந்து கீழே குதித்து, காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் ஹேமந்த (வயது – 33) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போன நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் நேற்று புதன் கிழமை காலை குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு குறித்த இளைஞன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞனை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்