தியத்தலாவை விபத்து: கைது செய்யப்பட்ட இருவருக்கு பிணை

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த இருவருக்கு இன்று இன்று புதன்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்