யாழில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-

யாழ் நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்து ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியது.

இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்தது.  இதேவேளை பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்