
ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்களை வெளியிட்ட சுகாஷ்
-யாழ் நிருபர்-
ஜனநாயகத்தின் குரலான வலம்புரிப் பத்திரிகையில் கைவைப்பதையோ ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றையதினம் செவ்வாய் கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு ஒப்பானதாகும். ஊடக அடக்குமுறைக்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, ஊடக உறவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காக வீதிக்கு இறங்கவும் தயங்கமாட்டோம் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
