
சீன அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
சீன பொதுவுடைமை கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய் கிழமை இலங்கை வரவுள்ளார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கடற்பாதுகாப்பு, முதலீடுகள், இருநாடுகளின் நட்புறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை புதன் கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
