
பன்னிப்பிட்டிய பகுதியில் பாரிய தீப்பரவல்
பன்னிப்பிட்டிய லியனகொட பகுதியிலுள்ள மர ஆலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குறித்த தீ பரவியதுடன், மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த தீப்பரவலினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மர ஆலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
