
குறுக்கு வீதியில் விதிகளை மீறும் பொலிஸார்
-ஹட்டன் நிருபர்-
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இவ்வாறான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை குறித்த வீதியில் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரும் இவ்விதிமுறைகள் பின்பற்றாது உதாசீனம் செய்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

