கடுகண்ணா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை

மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன் கீழ் கடுகண்ணாவை கல் துளையிடும் தளம், டாசன் டவர், கடுகண்ணாவை விடுதி, கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம் மற்றும் உர சேமிப்பு வளாகத்தை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்வதுடன், முதலிவத்தை கிராமத்தை விருந்தோம்பல் கிராமமாக அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேம சிங்க இந்த இடத்தை அவதானித்ததுடன், இதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய மாகாண சுற்றுலா திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

இதன்போது, மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருமான மேனகா ஹேரத், மத்திய மாகாண சுற்றுலாப் பணிப்பாளர் இனோதானி தம்பவிட்ட மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கஷ்வவத்த விருந்தோம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்