
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் பதற்றம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு இன்றைய தினம் ஞாயிற்று கிழமை கோட்டையிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடியிருந்தது.
அதன்போது, கட்சியின் நிறைவேற்றுக் குழுவினது ஏகமனதான தீர்மானத்துக்கமைய, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தொடர்ந்தும் அந்த பதவியில் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளமை குறிப்பிட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
