
ஐஸ் போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் கைது
75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய முல்லேரியாப் பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கடற்படையைச் சேர்ந்த 02 லெப்டினன்ட் கொமாண்டர்கள், பேலியகொட சங்க போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் உட்பட 04 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
