
விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்
பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்கல யாய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 67 மற்றும் 47 வயதுடைய இருவர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
