
சிறையிலுள்ள கணவருக்கு சம்பு போத்தலில் கஞ்சா: மனைவி கைது
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் போதை பொருள் கொடுக்க சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைக்காவலர்கள் சந்தேக நபர் கொண்டு வந்த சம்பு போத்தலில் 9000 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6410 மில்லிகிராம் கஞ்சாவை கண்டுபிடித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலகவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
