உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும்அரச கூட்டுத்தாபனங்களின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்தல்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

“பயனுறுதிமிக்க மக்கள்பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும்செயற்திட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் மூதூர்பிரதேச செயலகபிரதான மாநாட்டுமண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மூதூர்பிரதேச சபைச்செயலாளர் எஸ்.சத்தியசோதி, மூதூர்பொலிஸ் பெருங்குற்றவியல்தடுப்புப் பிரிவின்பொறுப்பதிகாரி ரூபசிங்ஹ, சமூர்த்தி தலைமையக முகாமையாளர் வி.கோடீஸ்வரி உள்ளிட்டோரும் ஆசிய மன்றம் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அபிவிருத்திஅகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜாதிலீப்குமார் உள்ளிட்ட இன்னும் பலஅதிகாரிகளும் முதன்மைஅதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அரசநிருவாகம் கூட்டுத்தாபன திணைக்களங்கள், உள்ளுராட்சிமன்றங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அவற்றைப்பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கான இலகு வழிமுறைகள் பற்றிய   தெளிவுகள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன. அத்துடன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகளை அணுகும் வழிமுறைகள் பற்றி சிவில்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சபையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்