மத்திய கிழக்கில் வரலாறு காணாத மழை: விமான நிலையத்திற்கு வருவதை தவிர்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெள்ளப்பெருக்கு காரணமாக விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

அத்துடன் துபாய் விமான நிலையத்திற்கு வருவதை தவிர்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓர் ஆண்டில் பெய்யக்கூடிய சராசரி மழைவிழ்ச்சி ஒரே நாளில் பெய்ததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக துபாய் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்