சூரிய ஒளியை 1 மாத குழந்தைக்கு உணவாக கொடுத்த தந்தை: சிசு பலி

ரஷ்ய நபரொருவர் சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பிரபல சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்தும் மாக்சிம் லியுட்டி என்பவரே தனது ஒரு மாத ஆண் குழந்தையான கொஸ்மோவின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளார்.

குறித்த நபர் தீவிரமான விசித்திரமான நம்பிக்கைகளை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

தனது ஒரு மாத ஆண் குழந்தைக்கு சரியான உணவு கொடுப்பதற்கு பதிலாக சூரிய ஒளியில் வைப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அவனுக்கு மனிதர்களால் இயலாத சக்திகளை வழங்க முடியும் என்று நம்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சரியான உணவு கொடுக்கப்படாத குழந்தை நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு சோச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தது.

குறித்த நபர் முன்னதாக தனது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும், தனது செயல்களுக்கு ஓன்லைனில் நியாயம் கற்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பிராணா” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கடுமையான வீகன் (சைவ) உணவு முறையை அவர் கடைபிடித்ததாகவும்  கூறப்படுகிறது.

மேலும், இது சுவாச உணவு முறை (Breatharianism) என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்கள் சூரிய ஒளியில் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற ஆபத்தான மற்றும் நிரூபிக்கப்படாத கோட்பாடு ஆகும்.

ஆகவே பிறந்த குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்