
ஒருமாத காலப் பகுதியில் 466 பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்கள் கைது
நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோதரை மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிட்டியாகொட மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரணால ,அங்கொடை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 466 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
