
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் அறிவிப்பு: பேராயர் மல்கம் ரஞ்சித்
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தி தமக்கு இதுவரை எழுத்துபூர்வமாக எதுவும் வழங்கவில்லை எனவும், ஆனால் ஏதோ வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எழுத்து மூலம் உறுதி மொழி தரப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தம்மைச் சந்திப்பதற்கு தேசிய மக்கள் சக்தி நேரமொன்றைப் பெற்றுள்ளதாகவும், அது பயனளிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
