
குறுந்தகவல் ஊடான மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி இணையத்தளம், போலி தொலைபேசி இலக்கங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாகவும் இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களமானது, கடன் அட்டைகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் திணைக்களத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
