மட்டக்களப்பு கிண்ணையடியில் சித்திரை விளையாட்டு விழா

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு வரலாற்றில் மிகவும் பழமையான ஆதி குடிகள், இந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் வாழ்ந்த இந்த கிண்ணையடி மிராவோடை கிராமங்களை எளிதில் மறந்து விட முடியாது ஒட்டமாவடி பாலம் வீதிகள் வருவதற்கு முன்பே எங்கள் மூதாதைகள் வயலும், சேனையும், மீனும் பிடித்து வாழ்ந்து இருந்தார்கள்.

மட்டக்களப்பு கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த சித்திரை புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு விழா கழக தலைவர் வி.தரனிகரன் தலைமையில் கிண்ணையடி விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலை நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவா.சந்திரகாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லது நாங்களே வகுத்து கொண்ட ஏதோ ஒரு இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக வீதிகள், பெரிய கட்டிடங்கள், பாலங்கள் தேவையில்லை என்றும் அவை இடிந்து விழவேண்டும் என்றும் சிந்தித்த காலம் அன்று மக்கள் மனநிலை அவ்வாறுதான் இருந்தது அன்றைய அரசியல் தலைவர்களும் போராட்ட இயக்கங்களும் அதனைதான் தூண்டி விட்டார்கள் இன்று வாழைச்சேனை பழைய நூலகம் எங்கே? நாங்கள் எங்களுடைய தலைமுறையை அழித்து கொண்டே இருந்தோம் இரத்தத்தையும், சதையையும், இறந்து போன உடல்களையும் பார்த்தோம் .

இன்று எங்கள் முன் இருக்கின்ற சவால் உலகத்தில் ஏற்பட்டுள்ள சவால், நமது நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள சவால் அதுவும் மட்டக்களப்பிற்குள் ஏற்பட்டுள்ள சவால் என பிரித்து பார்த்தால் நாம் எங்கு இருக்கின்றோம் என்பது புரியும்.

மேலும் தெரிவிக்கையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சவால்களில் கல்குடா தொகுதி மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கின்ற தொகுதி கண் தப்பினால் மரணம் பக்கத்தில் இருக்கின்ற இன்னுமோர் மதத்தை பின்பற்றுகின்ற முஸ்ஸிம் சமூகம் கல்குடா தொகுதி தங்களுடைய தொகுதி என்ற அடிப்படையில் திட்டங்களை தீட்டியிருக்கின்றார்கள்.

ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது அதற்கு காரணம் அவர்கள் பொருளாதார சமூக விரிவாக்கல் பிறப்பு வீதம் அதிகரிப்பு காரணம், தேர்தல் என்று வந்தால் அவர்கள் அதிகூடிய வாக்குகளை அளிப்பது ஒரு காரணம், நாம் கல்குடா தொகுதியை வெல்வோம் தோற்போம் என்று தலையை பிய்க்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. பூர்விக குடிகள் என்ற ரீதியில் நாங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

தண்ணீர் பிரச்சினை உண்டு விவசாயத்துக்கு தண்ணீர் வழங்குவதும், குடி நீருக்கு தண்ணீர் வழங்குவதும் மழை நீரினால் தேங்கும் தண்ணீரை வடிய வைப்பற்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் அதே போன்று புறம் கிடக்கும் நிலங்களில் குடியமர்த்துவதும் பயிர் செய்ய வைப்பதும் அப்பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் , போக்குவரத்து மின்சாரம் போன்றவற்றை மிக இலகு படுத்தி செய்து கொடுக்கவேண்டும் அப்பகுதியில் இருக்கும் காடுகள், தரிசு நிலங்கள் எமக்கு சொந்தமான நிலங்கள் எங்களுடைய பாட்டன் பூட்டன் விவசாயம் செய்த காணிகள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது இப்போது காடு பிடித்து உள்ளது அடுத்து அப்பகுதியில் இருக்கும் நிலங்கள் பயன்படுத்த வேண்டும்.

நாங்கள் பட்ட துன்பங்களோடும் துயரங்களோடும் வாழ்ந்து மடியாத எங்களுக்கு முன் இருக்கின்ற சவால்களை வெற்றி கொண்டு எங்களுக்கு முன் இருக்கின்ற இளம் சிறார்களின் எதிர்காலத்தை ஒளிமயமக்குவது என்பதை பற்றி சிந்தியுங்கள் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான மில்லர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த சித்திரைப் புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு விழாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்வுகளாக வழுக்கு மரம் எறுதல், தலையணை சமர்,தடை தாண்டல் மற்றும் சூப்பியில் பால் குடித்தல் இன்னும் பல நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்