
ஓமானில் சீரற்ற காலநிலை: 18 பேர் பலி
ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஓமான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
