
காசாவின் ரஃபாவில் தாக்குதல்: 7 பேர் பலி
காசாவின் தெற்கு பகுதியான ரஃபாவில் உள்ள ஏதிலிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலிய படைகள் இதுவரை 100ற்கும் அதிகமான ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளதாகவும் கைதானவர்களில் 40 பேர் இஸ்ரேலின் காவலில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
