வாகன விபத்து: ஒருவர் காயம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் நேற்று செவ்வாய் கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் நின்ற கார் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிசார் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்