போதைப்பொருளுக்காக திருடியவர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய் பணத்தையும் ஐந்தரைப் பவுண் பெறுமதியான நகையையும் திருடிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருடியதாக குறித்த சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்