
பற்றி எரிந்த இராஜாங்க அமைச்சரின் வாகனம்
பண்டாரவளை – ஹல்பே பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 12.45 மணி அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.
எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, அமைச்சர் நேற்று திங்கட்கிழமை மஹியங்கனை பிரதேசத்தில் இருந்து சென்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பண்டாரவளை மாநகர தீயணைப்புத் திணைக்களம், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் எனினும் அமைச்சருக்கோ, சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என எல்ல பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
